ஏழைக்கு ஒரு கவிதை

🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖

*ஏழைக்கு ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
_குமரேசன்_

🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖

ஏழைகளின்
உடலும் உடையும்
அழுக்குதான்....
ஆனால்
உள்ள மட்டும்
தூய்மையாகவே இருக்கும்...!

பணத்தில்
வேண்டுமானால்
ஏழையாக இருக்கலாம்
ஆனால்
பாசத்தில்
பணக்காரன் தான் ....

உழைத்து உழைத்து
கைகள்
இரும்பை விட
கடினமாக
இறுகிப் போனாலும்....
இதயம் என்னவோ
இலவம்பஞ்சை விட
மென்மையானதுதான்....

ஏமாந்து வாழ்ந்தாலும்..
யாரையும்
ஏமாற்றி
வாழ்ந்தவன் அல்லர்.....!

மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்தாலும்...
அவர்களால் தான்
இந்த நாடு
தேயாமல்
வளர்ந்து வருகிறது...!

ஒவ்வொரு நாளும்
ஏழையாய் இருந்தாலும்
ஒரு நாளும்
கோழையாய் இருந்தது இல்லை...

ஆடம்பரம்
வசதி வாய்ப்புகளை எல்லாம்
பிரிந்து வாழ்ந்தாலும்....
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்பவர்கள்....
குழந்தைகளை
அனணத்துக்கொண்டு
தூங்குபவர்கள்.....

கிடைப்பது
சிறிதளவு
உணவாக இருந்தாலும்
வாயில்லாத ஜீவன்களுக்குக் கூட பகிர்ந்து
கொடுப்பார்கள்....
ஏனெனில்
பசியின் கொடுமையை
நன்கு உணர்ந்தவர்கள்....

ஏழையின் சிரிப்பில்
இறைவனை
காணலாம் என்றனார்..
அதனால்
இன்று வரை
இறைவனைக்
காண முடியவில்லையோ..


*கவிதை ரசிகன்*

🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖🛖

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Mar-22, 10:28 pm)
பார்வை : 57

மேலே