விடாமல் துடிதுடிக்கிறது என் நெஞ்சம் 555

***விடாமல் துடிதுடிக்கிறது என் நெஞ்சம் 555 ***


உயிரே...


எப்போதும் பரபரப்பான
இந்த சாலையில்...

பலநாட்கள் எதார்த்த பார்வையில்
என் கண்களில் விழுந்திருக்கிறாய்...

கூட்ட நெரிசலில்
கைபேசியை நான் தவறவிட...

கண்டு எடுத்து
நீ பத்திர படுத்தினாய்...

எதார்த்த பார்வையில்
விழுந்தவள் அருகில் நான்...

கைமாறிய கைபேசியில்
என்னுள் ஒன்று குறைந்தது...

இதயம் களவாடி சென்றாயோ
விடாமல் துடிதுடிக்கிறது நெஞ்சம்...

சில நிமிடத்தில் கடந்து செல்லும்
இந்த சாலையை...

பலநிமிடம் கடப்போம்
கைகோர்த்து நீயும் நானும்...

நாம் ரசித்து சென்ற
சாலைதான் வெறிச்சோடி கிடக்கிறது...

இன்று மாநில
முழுஅடைப்பு போராட்டமாம்...

நீ இல்லாத என் வாழ்வும் வெறிச்சோடி
கிடக்கிறது நீ இல்லாமல்...

நீ யாருக்காக உன்
இதயக்கதவை அடைத்துக்கொண்டாய்...

அன்று நாம் ரசித்த
சாலையின் கூட்ட நெரிசல்தான்...

இன்று எனக்கு
தனிமையில் எரிச்சல் கூட்டுகிறது...

பனிக்கூழாய் உருகிக்கொண்டு
இருக்கும் என் இதயத்தை...

நீ முழுமையாக
உருக வைத்துவிடாதே...

என்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே.....


***முதல்பூ .பெ .மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (18-Mar-22, 9:18 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 367

மேலே