காதல் கடிதம்

நான் உனக்கு எழுதிய
காதல் கடிதத்தை
படித்தே பார்க்காமல்

நீ அறிந்த ஆங்கிலத்தில்
"NONSENSE" என்று கூறி
கிழித்து போட்டு விட்டாய்...!!

நீ கிழித்து கசக்கி போட்டது
வெறும் காகிதமல்ல
என் இதயம் என்பதை
யாரிடம் சொல்லுவேன்...!!

காலங்கள் மாறி
உன் மனதில்
காதல் பிறக்குமா
என்று தெரியவில்லை

ஆனா..
காதல் கொண்ட
என் மனமோ
தண்ணீர் இல்லாத
பாலைவனம் போல்
உன்னை நினைத்து
தவிக்குது...!"
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Mar-22, 6:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal kaditham
பார்வை : 208

மேலே