என் வலிகளை யாரும் உணரப்போவதுமில்லை 555

***என் வலிகளை யாரும் உணரப்போவதுமில்லை 555 ***



என்னுயிரே...


நமக்குள் இனி சந்திப்புகள்
கிடையாது தெரியும்...

தேடலின் சுகம் என்னவென்று
காற்றுக்கு தெரியும்...

கலங்கி நிற்கும்
என் கண்களுக்கு தெரியும்...

காதலின் உணர்வு
என்னவென்று...

இதயம் மெல்ல
மெல்ல துடிக்கிறது...

இரவுகளும் மெல்ல
மெல்ல நகர்கிறது...

என் இமைகளில் நீரோ
மெல்ல மெல்ல கசிகிறது...

நீ கொடுத்த
உன் நினைவுகளால்...

என் மார்போடு சாய்த்து
உன் வலிகளையும்...

என் நெஞ்சோடு அனைத்துகொள்ள
தவம் கிடந்தேன்...

என்னிடம் மட்டுமே அன்பாக இருக்க
வேண்டுமென்ற எண்ணம்தான்...

பலரின் வாழ்வின்
பிரிவுக்கு காரணம்...

நீ என்னை புரிந்து
கொள்ளாததால்தான்...

நம் அன்பு
இன்று அழிந்துவிட்டது...

நம்பிக்கை இல்லாமல்
ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள்...

பலருக்கும் வலிகளை
மட்டுமே கொடுக்கும்...

கதிரவன் என்றும் மேற்கில்
உதிக்க போவதில்லை...

நீ வெறுத்தாலும் என் மனம்
உன்னை வெறுக்க போவதுமில்லை...

கண்ணீர் மட்டுமே
மிச்சமான என் வாழ்வில்...

என் வலிகளை யாருமே
உணரப்போவதில்லை.....


***முதல்பூ .பெ .மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (21-Mar-22, 5:03 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 494

மேலே