நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை

என் தினசரி நாட்களில், அதிகாலை உன்னுடைய குரல் ஒலிக்காத போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

அன்றைய தினம், உன்னுடன் சேர்ந்து ஆரம்பிக்கும் என்று நினைத்து, நான் ஏமாற்றம் அடைந்த போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

அவ்வப் பொழுது நமக்குள் நடைபெறும் சிறு சிறு சண்டைகளின் போது கூட - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

என்னால் உனக்கு ஏற்பட்ட துயரங்களில் நீ அவதிப்பட்ட போதும், எனக்காக தான் நீ என்று நினைத்து - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட நிகழ்வுகள் காரணமாக நாம் உரையாடாமல் இருந்தபோதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

தினசரி நான் சந்திக்கும், மனிதர்களில் பலதரப்பட்ட எண்ணங்கள் என்னுள் எழுந்த போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

உன்னுடைய நினைவுகளில் நான் இல்லை என்று தெரிந்த போதும், என்னுடைய நினைவுகளை நீ நிரப்ப முயற்சி செய்து கொண்டிருந்த போதும் - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

ஆனால், தற்போது தகுதி தராதரம் எதிர்பார்த்து நடக்கின்ற இன் நிகழ்வுகளில் கூட - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

என் தினசரி நொடிப் பொழுதுகளில் நீ எனக்குச் செய்த அனைத்தையும் அசை போட்டுக்கொண்டு இருக்கும்போது கூட - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

உன்னுடைய வாழ்க்கையில் எனக்கான இடத்தை வேறொருவர் நிரப்ப முயற்சி செய்த போதும் கூட - நான் உன்னை நேசிக்க மறந்ததில்லை.

எழுதியவர் : குட்டி புவன் (24-Mar-22, 7:39 am)
சேர்த்தது : குட்டி புவன்
பார்வை : 254

மேலே