உலகம் பெரிய உருண்டை

உலகம் பெரிய உருண்டை
ஆரோவிலில் கண்டேன் இதை..
பாண்டிச்சேரி ஆரோவிலில் கண்டேன் இதை...
(உலகம் பெரிய உருண்டை
ஆரோவிலில் கண்டேன் இதை)

மனிதன் ஓர் அதிசய பிறவி
அவன் எண்ணத்தின் வேகம் புரவி
ஆசை துறந்தவன் துறவி
துறவியின் அமைதி ஆனந்த அருவி
(உலகம் பெரிய உருண்டை
ஆரோவிலில் கண்டேன் இதை)

சமரசம் சமாதானம் அன்பென போதிக்கும் உலகம்
அக்கரை தொடங்கி உக்ரைன் வரைக்கும் எங்குமே கலகம்
இயற்கை நமக்கிட்டது அமைதி திலகம்
அமைதி இருக்கும் இடமோ நூலகம்
(உலகம் பெரிய உருண்டை
ஆரோவிலில் கண்டேன் இதை)

நூறு நாட்டின் மண்ணை ஆரோவிலில் சேர்த்தது நல்லெண்ணம்
ஐக்கிய நாடுகள் சபையின் தோழமை அன்பின் ஒரு வர்ணம்
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித ஒருமைப்பாட்டின் வண்ணம்
ஆண் பெண் ஒன்றே உலகத்தில் பிரிவு என்று போற்றும் வண்ணம்
ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடில் , அவன் அமைதி ஆனந்தம் காண்பான் என்பது திண்ணம்!

உலகம் பெரிய உருண்டை
ஆரோவிலில் கண்டேன் இதை.
பாண்டிச்சேரி ஆரோவிலில் கண்டேன் இதை...

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (25-Mar-22, 12:26 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 50

மேலே