நான் அறிந்த தெரியாத என் வழி
எங்கே என்று புரியாத இடத்திற்கு பல வழிகள்
அப்படிப்பட்ட வழிகளில் ஒரு சில என் வழிகள்
எதற்கு பயணிக்கிறோம் என்று விடை அறியா கேள்வி எழுப்பும் என் விழிகள்
அவைகளுடன் உரையாடும் என் எண்ணத்தின் ஓசையில்லா மொழிகள்
இதற்கிடையில் பாவம் புண்ணியம் அறியாமல் என் மேல் விழும் சில பழிகள்
என் சுழி சுத்தமில்லையென, எனை திடமாக நம்பவைக்கும் இரவின் சுழிகள்!