உன்னையே நீ அறியமாட்டாய்
தெருவில் திரியும் , தெரியும் பலரும் எதையோ தேடலில் ஈடுபடுபவர் போல் காணப்படினும்!
பலர் எதைத் தேடுகிறோம் என்றே புரியாமல் எதையோ தேடுகின்றனர் என்று அவர்க்கே புலப்படினும்!
சிலர், எதையோ கண்டு விட்டோம் என்று புரியாத ஒரு நிலையில் உணர்ந்திடினும்!
எவரும் எதையும் எப்போதும் எதற்காகவும் எந்நிலையிலும் உணர்ந்திடிலர், அறிந்திடிலர்!