எவரேனும் உளரோ
காப்பியில் அளவாக சர்க்கரை போட்டிடினும்,
குறைவாக போட்டிடினும்
சர்க்கரையே இடவில்லை எனினும்
காப்பி விலையில் மாற்றம் இல்லை!
எவர் பதவிக்கு வந்தாலும் ஆண்டாலும் நம் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் இல்லை!
அன்பை பொழியினும், கோபத்தில் தவழினும், ஆணாயினும், பெண்ணாயினும் , பணம் படைத்தவர் ஆயினும், பணமுடை கொண்டவர் ஆயினும், பசிக்கும் வயிறுக்கு உணவு என்பதில் ஒரு மாற்றம் இல்லை!