குழலும் மனிதனும்
மூங்கிலில் வேய்ந்த வேங்குழல் அதனுள்ளே
வெறும் வெற்றிடமே.,குழலில் இட்ட
துளையில் கலைஞன் இதயத்தில் இணைந்து
ஊதிடும்போது சப்த ஸ்வரங்கள் எழுப்பிடும்
தேவனும் மகிழ்ந்திடும் இனிய இசை
அந்த குழல்போல் நம் இதயமும்
கல்மிஷம் ஏதும் இல்லாது புனிதமாய் இருந்திட்டால்
நம் பேச்சும் குழல் இசைபோல் அமையும்
இறைவனும் மகிழ்ந் திடவே