கரை கான இயலாத காதல்

கரைகாண இயலாதக் காதல் !
------------------

காதலித்துக் கரம்பிடித்து
கலியாணம் செய்து கொண்டேன் !

காதலியாய் இருந்த நாளில்
கண்களிலே வழிந்தக் காதல்
காணாமல் போய்விடவே

கரைச்சலாகிப் போனதெங்கள்
கலியாண வாழ்க்கை!

காரணத்தைக் கண்டு மீண்டும்
காதலிலே வாழ்ந்திடவே
கடும்முயற்சி மேற்கொண்டேன் !

மது வாடை உனக்குப் பிடிக்காது
ஏற்கனவே
மது ஒழித்தேன் ;
மாற்றமில்லை !

புகை உனக்கு ஒவ்வாது
போக்கிவிட்டேன் ;
மாற்றமில்லை !

சூதாட்டம் உனக்கு
ஆகாது
விட்டு விட்டேன்;
மாற்றமில்லை!

பிற பெண்டிர் நோக்குதலோ
அறுவெறுப்பு உனக்கு
எனவே
துறந்துவிட்டேன்;
மாற்றமில்லை!

நட்புறவு நாடினாலும் வாடுகிறாய் ஒதுங்கி விட்டேன் ;
மாற்றமில்லை!

பெற்றரை உற்றவரை சகிப்பதில்லை உனக்கு -
பிரிந்து விட்டேன் ;
மாற்றமில்லை !

மனம் நொந்து
தினம் வெந்து
மதுக் கடையுள் புகுந்து -வாய் மூக்கில்
புகைப் போக்கி
அடுத்தவளின் தோள் சாய்ந்தேன் ;

அலறிக்கொண்டு ஓடிவந்தாய்
ஐயகோ !- மீண்டும்
உன்
கண்களிலே
காதல் கசிந்து வழிகிறதே !
இது என்ன மாற்றம் ?

-யாதுமறியான்.

( கோரிக்கை:

படிப்பவர்கள் பரிட்சித்துப் பார்க்க வேண்டாம் )

எழுதியவர் : -யாதுமறியான் . (4-Apr-22, 7:43 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 96

மேலே