தன்னம்பிக்கை

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

*சாம்பலாக்கும் சோம்பல்*

சாதிப்பதற்கு
முதல் தடைக்கல்
சோம்பல்...
சாதிக்க நினைப்பவரிடம்
இருக்கக் கூடாது
இந்தக் குணம்...

சோம்பல்
லட்சியத்தின் ஆணிவேரை
அரித்துவிடும் கரையான்கள்...
குறிக்கோளை கொன்றுவிடும்
வைரஸ்கள்....
முன்னேற்றத்தை முடக்கிவிடும்
முடக்குவாதம்...
மனவளத்தை கெடுத்துவிடும்
செயற்கை உரம்...

சோம்பல்
வாழும் போதே பிணமாக்கும்
வாழ்நாட்களை வீணாக்கும்...
எண்ணங்களை மண்ணாக்கும்
மனதை பலவீனமாக்கும்...

சோம்பலை
களையெடுத்தால்தான்
சாதனைப் பயிர்
நன்றாக விளையும்...
சோம்பல் பூச்சிகளை
அழித்தால்தான்
வெற்றி விளைச்சளை
பெற முடியும்....

வெளிச்சம் என்னும்
சுறுசுறுப்பை
உன்னிடம் வைத்துக்கொண்டால் ...
இருள் என்னும்
சோம்பல் உன்னருகில்
வரவே வராது...

சோம்பலில் சிக்கினால்
முடிவில் சாம்பல்தான் மீதி...
சோம்பலை காலில்போட்டுமிதி
உன்னைக் கண்டால்
பயப்படும் விதி....!!!


*கவிதை ரசிகன்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

எழுதியவர் : கவிதை ரசிகன் (4-Apr-22, 10:14 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 104

மேலே