அன்பின் அதீரனே
அன்பின் அதீரனே....
அரங்கேற்றம் முடிந்த பின்பு
அரவம் அற்றுக் கிடக்கிறது அரங்கு
அடியேன் நிலையும் அதுதான் ...
கூடலும் ஊடலும்
நிஜமாய் தொடர வரம் கேட்டேன்...
தேடலையும் வாடலையும் வம்பாய் திணித்து
தடமின்றி என்னில் விலகி விட்டாய்
கூட்டுக்குள் புழுவாய் உன் நினைவுகளில் உருபெருகி
வெளிவரவும் மறுத்து
மூச்சிறைந்து கிடக்கிறது மனது
தேவன் ஊற்றிய ஆசீர்வாத குவளையில்
அடி தங்கிய என் நிம்மதியை
அப்படியே விழுங்கிவிட்டாய்
அதீரா......
கல்லறைக்கல் புரண்டு உயிர்த்தெழுந்த புண்ணிய கிரியையாய்
அண்ட சராசரத்தில் ஓர் துகளாய்
எங்கேனும் உன் நினைவில்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
உணர்வற்ற வருடலையாவது
மூடு கல்லில் பதித்து விட்டுப் போ.......

