உயிராகிப் போனவள்

எனை தீண்டிய தென்றல் !
----------'

தென்திசைப் புயலொன்று தென்றலென மாறியதே !
என்மீதில் இதமாக எங்கெங்கோ மோதியதே !

ஊனோடும் உயிரோடும் ஒன்றாக இணைந்ததுவே /

தேனாகித் தெவிட்டாதத் தெள்ளமுதாய்த் தித்திக்குதே!

சஞ்சரிக்கும் கோள்களிந்த சம்பவத்தைச் செய்தனவோ /

மஞ்சத்திலே மன்மதனால் மகிழ்ச்சியெலாம் பெய்ததுவோ!

துயரங்கள் மோதுகையில் துணையாகி நின்றாளே/

அயராத அரவணைப்பால் அன்னையென உயர்ந்தாளே!

இளமாலை நேரத்தே இளையவனைத் தீண்டியவள்/

உளமெல்லாம் நிறைந்தாளே உயிராகிப் போனாளே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (16-Apr-22, 8:46 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 376

மேலே