நீ பூ வைத்து வரும் நாளெல்லாம்

நீ பூ வைத்து வரும் நாளெல்லாம்
என் கையில் புத்தகம் புகாது
என் கண்ணில் கவனங்களே நிகழாது
அடிக்கடி உன்னை பார்க்க தோன்றும்
அளவில்லாத ஆசைகள் உள் ஊறும்
வகுப்பறை முழுதும் உன் பூ வாசம் தான் வகுப்புகள் எடுக்கும்
அதை உற்று கவனிக்கும் என் மனதினை கெடுக்கும்

எழுதியவர் : வ. செந்தில் (17-Apr-22, 6:31 am)
சேர்த்தது : Senthil
பார்வை : 159

மேலே