நட்பின் விதை

தனது 51 வது பிறந்த நாளை
ஆடம்பரமாக கொண்டாடிய
தாத்தாவின் ,
அடுத்த பிறந்த நாளுக்கு
மிட்டாய்களுடன் வந்த
அவரது நண்பருக்கு தெரியாது
இரண்டொரு தினங்கள்
முன்னதாக தாத்தா
இறந்துபோன செய்தி

மிட்டாய் பாக்கெட்டை
கீழே போட்டு விட்டு
அவர் அழுத காட்சி
மனதை விட்டு அகலவில்லை இன்னும்

5வயதில் அர்த்தம் அவ்வளவாக புரியவில்லை
அண்ணன் அந்த மிட்டாய்களை
எடுத்து கொடுத்த போது
மிட்டாய் இனித்தது
மனது கனத்தது.,

நட்பின் விதை
மனதில் விழுந்தது ..

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (23-Apr-22, 6:38 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : natpin vaithai
பார்வை : 873

மேலே