வெறுமையானேன்
உன் விழியோர மையெடுத்து
எழுதிவிட்டேன் காவியங்களை..
உன் இதழோர தேனெடுத்து
படைத்துவிட்டேன் விருந்துகளை..
உன் கால்கொலுசு இசையெடுத்து
பாடிவிட்டேன் ராகங்களை..
உன் இடையாடும் நாட்டியங்களில்
கண்டெடுத்தேன் நர்த்தனங்களை...
எல்லாம் உன்னிலிருந்து எடுத்தவைதான்
என்சுயம் இழந்து வெறுமையானேன்.