கடவுள் இருக்கான் குமாரு
முதல்நாள் கல்லூரி கொஞ்சம் கூட பயமே இல்லை.. காரணம் ராக்கிங் இல்லாத கல்லூரி.. சீனியர்னு யாராவது இருந்தா தானே ராக்கிங் பன்ன.. சீனியர்னு சொல்லிட்டு பத்து பதினஞ்சி பேர் இருப்பாங்க.. அவங்களும் ரொம்பவே சைலண்ட் டைப்..
அந்த ஆண்டு தான் அந்த கல்லூரி கட்டமைக்கப்பட்டதுனா நீங்களே யோசிச்சிகங்க.. பில்டிங்க் ஸ்ட்ராங்கு.. ஸ்டூடண்ட் தான் கொஞ்சம் வீக்கு.. அத பூர்த்தி செய்யதானே நாங்க வந்து சேர்ந்துருக்கோம்.. முதல் நாள் வகுப்பு
நிறைய கனவுகளும் அதனால் நிகளும் சந்தோசத்திற்க்கும் குறைவில்லை..
விசுவல் கம்யூணிகேசன் டிபார்ட்மெண்ட் எங்க இருக்கு தேடிகிட்டு நிக்கும் போது தான் ராணி அக்கா வந்தாங்க..
மேடம்..
விஸ்காம் டிப்பார்ட்மெண்ட் எங்க இருக்கு…
என்ன மேடம்னலாம் கூப்டாத.. ராணி அக்கானு கூப்டு..
ராணினு கூப்டவா..???
செருப்பு…
சாரி’க்கா… சொல்லுங்க..
டேய்ய்ய்.. என் மகன் கூட இந்த காலேஜ்ல தான் விஸ்காம் படிக்கிறான் இந்த வருசம் தான் அவனும் சேர்ந்து இருக்கான்..
என்னக்கா சொல்ரீங்க இந்த சின்ன வயசுல உங்களுக்கு காலேஜ் படிகிற வயசுல பையன் இருக்கானா…!!!
டேய்ய்.. டேய்ய்ய்… டேய்ய்ய்…
சிரிச்சிகிட்டே போய்ய்.. ஒரு வகுப்பறைய காமிச்சாங்க…
உள்ள எட்டி பார்த்தா கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஒரு ஈ, காக்கா கூட இல்ல.. ரெண்டு பரதேசிய தவிர…
ஒரு பரதேசி பேரு வாசு..
இன்னொருத்தன் பேரு உதயபிரகாஷ்..
என்னக்கா… ரெண்டே பேர் தான் இருக்கானுங்க..??
அதுல ஒருத்தன் என் மகன்..
சுத்தம்… பொண்னுங்களெல்லாம் இல்லயா…
சிரிச்சிகிட்டே பேசாமா அங்க இருந்து ராணி அக்கா நகர..
என்ன சிரிக்கிரீங்க நான் சீரியஸ்ஸா பேசிட்டு இருக்கேன் சிரிக்கிறீங்கனு புலம்பிகிட்டே உள்ள வந்தேன்..
இவனுங்க கிட்டலாம் இந்த “சூனா_பானா” பேசனுமானு முன்னாடி இருக்கிற பெஞ்ச்ல உக்காந்தேன்..
ஒருத்தன் என் பக்கத்துல வந்து ப்ரோ.. சரக்கு அடிப்பீங்களானு கேட்டான்..
எனக்கு தூக்கிவாரி போட்டது..
டேய்ய்ய்.. என் பேர கூட கேட்காம பர்ஸ்ட் மீட்லயே இப்டியாடா கேட்ப..??
சாரி ப்ரோ.. எப்டி இருந்தாலும் பேர சொல்லி கூப்ட மாட்டோம்.. அதான் அத எதுக்கு கேட்டுகிட்டுன்னு..
சரி ப்ரோ என் பேரு வாசு இவன் பேரு உதயபிரகாஷ்..
ஏன் அவன் பேச மாட்டானா…
இல்ல ப்ரோ அவன்கிட்ட நான் பேசுனாலே ஒரு மாதிரி சிரிக்கிறான்…
அய்யய்ய… செங்கல் சைக்கோ…
அப்டி இல்ல ப்ரோ ஒரு மாதிரி சைலன்ட் டைப் ப்ரோ அவன்.. சரி உங்க பேர் என்ன ப்ரோ..
பாரதி..
என்ன ப்ரோ பொம்பள பேர் மாதிரி இருக்கு..
பாரதிதாசன் எல்லோரும் பாரதினு தான் கூப்டுவாங்க..
க்ளாஸ் ல வேர யாருமே இல்லயா??
இன்னும் யாரும் விஸ்காம் சேரலயாம் ப்ரோ.. நாம கொடுத்து வச்சது அவ்ளோ தான்.. மத்த டிப்பர்ட்மெண்ட்லலாம் 40, 50 பேர் இருக்காங்க ப்ரோ.. நாம யாருக்கு என்ன பாவம் பன்னோம்.. முதல் நாளே புலம்ப ஆரம்பிச்சிட்டான்.
சரி வா.. போயி சோகத்த தீர்ப்போம்..
காலார ஒரு கி.மீ நடந்து போனா பசங்களுக்கு பிடிச்ச “கடை”…
டேய்ய்.. இன்னும் எவ்லோ தூரம் டா..
கொஞ்ச தூரம் தான் ப்ரோ..
டேய்ய்.. அவன் பேசவே மாட்டானா.. அவன் பேசம வர்ரது ஒரு மாதிரி இருக்குடா..
டேய்ய் நீ பேசிவியா மாட்டியா??
பேசுவேன் ப்ரோ....
நல்லா பேசுன போ.. இந்தா… போயி 3 பீர் வாங்கிட்டு வா..
வாசு உக்காரு அவன் வாங்கிட்டு வரட்டும்னு நீ உக்காரு..
முதல் முறை பாருகுள்ள வந்து இருக்கேன்..
மீன்கொத்தி போட்ட பாட்டில் மூணு வாங்கிட்டு வந்தான்..
நல்ல வெயில்.. செம்ம கூலிங்கா பீர்.. சைட்-டிஸ் என்னன்னமோ போனுச்சி..
அர பாட்டில் உள்ள போயிருக்கும்.. உதயபிரகாஷ் யாரையோ டேய் மச்சான்னு கூப்டான்..
நான் திரும்பி பார்த்தேன்..
டேய்ய்ய்… மச்சான்… உன்ன தான் டா மச்சான்..
இடையில வாசு டேய் மச்சி உன்ன தான் டா கூப்டுறான்..
அட பாவிங்களா இப்ப தானேடா ப்ரோனு சொன்னீங்க..
ஏன் நாங்க கூப்ட கூடாதா.. சொல்றா நாங்க கூப்ட கூடாதா… பேசாதடா மயிரு பாட்ல எடுத்து சொருகிட போறேன்…
எது பாட்ல எடுத்து சொருக போரியா..
டேய்ய்ய் வாசு இவனாடா பேச மாட்டானு சொன்ன..
எனக்கே தெரியாது மச்சி நேத்து தான் இவன எனக்கு தெரியும்.. இன்னைக்கு தான் இவன் கூட சரக்கு குடிக்கிறேன்..
சரி விடு போத ஏறிட்டு போலனு சொல்லி முடிக்கிறத்துக்கு முன்னாலயே..
சரக்கு குடிச்சா போத தான் ஏறும் பின்ன…
டேய்ய்.. முடியல டா.. வா போதும் கிளம்பலாம்..
சரி கிளம்பலாம்..
வாசு இன்னொரு பையன் நம்ம டிப்பார்ட்மெண்ட்ல ஜாய்ண்ட் பன்னிருக்கானா??
தெரியலயே ஏன் மச்சி கேக்குற??
இல்ல ராணினு ஒரு அக்கா அவங்க பையனும் இங்க தான் ஜாய்ண்ட் பன்னிருக்கதா சொன்னாங்க..
மச்சி அந்த பையன் நான் தான் டா..
நிஜமாவா..
நிஜமா இல்ல நிஜம் மாதிரி.. அவங்க என் ப்ரண்ட் ஸ்டாலினோட அம்மா.. நானும் அம்மானு தான் கூப்டுவேன்.. அதான் அப்டி சொல்லியிருக்காங்க..
ஓ.. சூப்பர் மச்சான்..
இப்டி ஏதேதோ பேசிட்டு இருந்தோம்..
இதுக்கு மேல காலேஜ் உள்ள போனா மாட்டிக்குவோம்.. வீட்டுக்கு போகலாம்னு நான் பஸ் ஏற அவனுங்களும் டாட்டா காட்டி ஏத்திவிட்டு வழி அனுப்பி விட்டானுங்க..
மறுநாள் வழக்கம் போலதானு நினச்சி போனா…
அந்த ராணி அக்கா வந்தாங்க..
டேய்.. பாரதி, வாசு, உதயா மூனு பேரையும் பிரின்ஸ்பால் கூப்டுராங்க.. போய் என்னானு கேளுங்க..
சோலி முடிஞ்ச்..
மொத்த டிபார்ட்மெண்ட கூப்டாங்கனு சொல்லி பழகுங்கக்கானு சொல்லிகிட்டே பிரின்ஸ்பால் ரூம்க்கு போனோம்..
துனை முதல்வர் ஃபாதர் அமிர்தராஜ்.. முதல்வர் சிஸிலியா பாண்டியன்..
ஃபாதர்’னு நாங்க கோரஸ் பாட..
Wait there till your HOD come..
வெளில வெயிட் பன்ன சொல்ராருடா, நம்ம HOD வருவாராம்..
வெயிட் பன்னோம்..
எங்களுக்கு அட்மிசன் போட்ட சார் அங்க வந்தாரு..
டேய் நேத்து என்னடா பன்னுனீங்க..
ஒன்னும் பன்னலயே சார்..
பொய் சொல்லாதீங்க.. சர்ச் காம்பவுண்ட்ல உங்க மூனு பேரு பேரும், டிப்பார்ட்மெண்டோட எழுதி இருக்கு..
நான் வாசுவ பார்க்க வாசு உதயாவ பார்க்க மூனு பேரும் சேர்ந்து அந்த சார பார்க்க..
என்னமோ பன்னுங்க.. வேணும்னா ஒரு ஐடியா சொல்ரேன்.., எங்க பேர நாங்களே ஏன் சார் எழுதபோரோம்..?? இது அதர் டிப்பார்ட்மெண்ட் பசங்களோட சதினு சொல்லிட்டு போங்க.. அது மட்டும் இல்லாம உங்க க்ளாஸ்ல ஸ்ட்ரங்க்த் ரொம்ப கம்மி அதனால எதும் ஆக்ஷன் எடுக்க மாட்டானுங்க.. போல்டா பேசுங்கனு சொல்லிட்டு பிரின்ஸ்பால் ரூமுகுள் போயிடார்..
அவர் உள்ள போன அடுத்த வினாடி டேய்.. யார்ரா எழுதுனனு கேட்டேன்..
சாரி மச்சான் உதயா தான் டா எழுதிருக்கான்..
எங்க அந்த பரதேசி..,
டேய்ய்.. உன் பேர எழுதுன ஓகே.. எங்க ரெண்டு பேர ஏன் டா எழுதுன??
நீ பஸ் ஏறுனத்துக்கு அப்ரம் வாசுவும் போயிட்டான்.. எனக்கு பஸ் வர லேட் ஆனுச்சி.. அதான் உங்காள ரொம்ப மிஸ் பன்னேன் டா..
நாசமா போச்சி…
அக்கா.. ராணி அக்கா இங்க வாங்களேன்..
என்ன பாரதி..
எங்க HOD சார் எங்க இருக்காங்க தெரியுமா..
டேய்ய்ய்.. இப்போ உள்ள போனாரே அவர் தான் டா உங்க சார்.. பேரு குமாரு..
என்னக்கா..??
குமார் டா…
ஓ…குமாரா…
பரவால்ல… கடவுள் இருக்கான் குமாரு…