சிரிக்கிற பொண்ணு வேண்டாம்மா

நாம் நேத்து பாத்துட்டு வந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்குதுங்க. அந்தப் பொண்ணும் அவளுடைய பெற்றோரும் நம்ம பையனைப் பிடிச்சிருக்குதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க என்ன சொல்றீங்க?
@@@@@@
பொண்ணு ரொம்ப அழகு. சிரிச்சா தேவதை மாதிரி இருக்குது, பொன்னி. நம்ம பையன் என்ன சொல்லறான்?
@@@@@@
நானும் பலதடவை அவனைக் கேட்டங்க. பிடி குடுக்கலாம் எதை எதையோ பேசறாங்க.
@@@@@
டேய் அழகுராஜா, இங்க வாடா.

(அழகுராஜா வந்து எதுவும் பேசாமல் நிற்கிறான்)
டேய் அழகு, நேத்து நாம் பாத்துட்டு வந்த பொண்ணு எங்க (இ)ரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. சிரிச்சா தேவதை மாதிரி இருக்கிறாள். அவுங்க வீட்டில எல்லோருக்கும் உன்னைப் பிடிச்சிருக்குதாம். நீ உன் விருப்பத்தைச் சொன்னா அடுத்த ஞாயிற்றுக்கிழமை மே திருமணத்தை நடத்த அவுங்களுக்கும் எங்களுக்குப் சம்மதம். நீ என்னடா சொல்லற?
@@@@@@
எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கல.
@@@@@
ஏன்டா?
@@@@@
அந்தப் பொண்ணு அழகா இருக்குது. சரிச்சா ரொம்ப அழகா இருக்குது. அதுதான் காரணம்.
@@@@@@
பொண்ணு அழகா இருக்குது. அதனால் அந்தப் பொண்ணு வேண்டாமா? என்ன பைத்தியக்காரத்தனம்டா இது.
@@@@@@
நான் சிரிச்சு நீங்க பாத்திருக்கறீங்களா?
@@@@@@
இல்ல.
@@@@@@
ஏன்?
@@@@#
நீயே சொல்லுடா.
@@@@@@#
என் பல்லோட (இ)லட்சணம் தெரியுமா தெரியாதா? மாட்டுப் பல்லு மாதிரி பெரிய பெரிய பல்லுக்கு. ஒரு பல்லு முன்னாடின்னா. பக்கத்துப் பல்லு பின்னாடி இருக்குது. பொண்ணு பார்க்க போன இடத்தில் நான் வாயை மூடிட்டே இருந்தேன்.
என் பல் வரிசை அப்பிடி. நான் வாயைத் திறந்து பேசி இருந்திருந்தா "அப்புறமா" சொல்லறங்கனு சொல்லியிருப்பாங்க.
@@#@@@
அப்ப இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லற. வயசு ஏறிட்டே போகுது. உந் திருமணத்தை எப்படா செஞ்சு பேரன் பேத்தியப் பாக்கறது?
@@@###@
என் பல் வரிசை மாதிரி உள்ள பொண்ணாப் பாருங்க. அவள் ஏழைப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை.
@####@#@@
சரி.

எழுதியவர் : மலர் (18-May-22, 5:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 129

மேலே