உங்களுக்காக ஒரு கடிதம் 20

அன்புத் தோழர்களே...
ரொம்ப போராடிக்கிறேனா என்ன? என்ன செய்வது? யாராவது பூனைக்கு மணி கட்டித்தானே ஆகவேண்டும். மணி கட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.கட்டவாது முயற்சிக்கணுமே. அந்த முயற்சியின் தொடக்கம்தான் இது. இதில் வெற்றி கிட்டுமா? தெரியாது. ஊதற சங்கை ஊதிவைக்கலாம் என்கின்ற முயற்சிதான் இது. நான் சொல்ல வருபவைகள் எல்லோர் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். அந்த பாதிப்பின் தாக்கம் அனுபவித்து இருப்பார்கள். அனுபவித்துக் கொண்டும் இருப்பார்கள். பாவம் வாயில்லா பூச்சிகள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்...சிந்தியுங்கள். ஏடாகூடமாக சிந்தித்து உங்களையும் ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உலகத்தையும் ஏமாற்றாதீர்கள். நிலையாய் சிந்தித்து நம் வாழ்வை சரிசெய்ய...நம் நாட்டை... உலகை நெறிப்படுத்த முயலுவோம். யாரும் இங்கே உத்தமர்கள் இல்லை. குறை சொல்வதை குறைத்துக்கொண்டு...நிறையை.. நிறைவாய் செய்ய முயற்சிப்போம்.
அடுத்து என்னை மிகவும் பாதித்தது. போராட்டங்கள்...ஸ்ட்ரைக்...தர்ணா... போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது நடக்கின்ற அட்டகாசங்கள்...அதனால் ஏற்படும் நஷ்டங்கள்...அதன்பின் அதை சரி செய்ய நாம் படும் கஷ்டங்கள்...நான்
சொல்கிறேன். அமைதியாய்...நிதானமாய்...யோசித்துப் பாருங்கள். சரி...போராட்டம் என்றால் என்ன? நம் கஷ்டங்களை...நம் ஒத்துழையாமையை...நம் டிமென்ட்களை அரசுக்கோ...இல்லை ஒரு நிர்வாகத்துக்கோ நாம் தெரிவிக்கப் பயன்படுத்த... நம் கையில் இருக்கும் ஆயுதம்தான் இந்தப் போராட்டம். ஆனால் இந்த ஆயுதத்தை சரியாக உபயோகப்படுத்த வேண்டுமல்லவா? அந்த ஆயுதத்தால் பொதுச் சொத்தை நஷ்டப் படுத்துவது... இல்லை சேதப்படுத்துவது.... எந்த விதத்தில் நியாயம்? அரசாங்கத்துக்கோ.... நிர்வாகத்துக்கோ...நஷ்டம் ஏற்படுத்தினால் அது பின்னால் நம் தலையில்தான் விடியப்போகிறது.. நம் நியாயத்திற்காக சாலைத் தடுப்புகளை உடைப்பது....சிக்கனல்களை சேதப்படுத்துவது....பொது வாகனங்களை எரிப்பது... சாலையில் இருக்கும் மற்ற வாகனங்களை அடித்து நொறுக்குவது... எதிரே நிற்கும் மற்ற கட்டிடங்களின் கண்ணாடிகளை சுக்குநூறாக்குவது... சிறு..சிறு கடைகளை மூடச் சொல்லியும் அதையும் அடித்து நொறுக்குவது...இதை சாக்காய் வைத்துக்கொண்டு பொது மற்றும் தனி மனித சொத்துக்களை... உடமைகளை கொள்ளை அடிப்பது...இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?. போராட்டம் முடிந்து அதே பொது சொத்துக்களான பஸ்,சிக்னல்,சாலை தடுப்புகள் மற்றும் சாலைகளை நாம்தானே உபயோகப் படுத்த போகிறோம். அவைகள் எங்கிருந்து வந்தன? நாம் செலுத்தும் வரிப் பணம்தானே...உரு மாறி நிற்கின்றன. நம் சொத்தையே நாமே அழிக்கலாமோ..அப்படி அழிக்கின்ற எண்ணம் எங்கிருந்து வந்தது? சிந்தியுங்கள். மற்றவர் சொத்தில் கைவைத்து ஒரு வகையில் கொள்ளைதானே.
எதற்கெடுத்தாலும் ஜப்பான்...ஜப்பானை பாருங்கள் எவ்வளவு சிறிய நாடு. அவர்களை பாருங்கள்.. மெடிக்கல் உபகரணங்களாகட்டும்.. டிவி, ம்யூசிக்,எலக்ட்ரோனிக்ஸ் கருவிகளாகட்டும்...எதை எடுத்தாலும் உலகளவில் ஜப்பான்...ஜப்பான்தான். எரிமலைகள் சூழ்ந்த நாடு... பூமியதிர்ச்சி...பூகம்பம் அதிகம் ஏற்படும் நாடு....விவசாயம் செய்ய குறைந்த மண்வளம் உள்ள நாடு..ஆனால் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு...இரண்டாம் உலகப்போரில் மனித இனத்தையே அழித்த அணுகுண்டால் ஏற்பட்ட தழும்பு இருந்தாலும்..வீறுகொண்டு எழுந்து மற்ற வல்லரசுகளோடு போட்டிக்குப் போட்டியாய் நிமிர்ந்து நிற்கும் ஒரு நாடு என்று பேசினால் மட்டும் போதாது...அங்கும் போராட்டங்களும் தர்ணாக்களும் நடப்பது உண்டு. நான் கேள்விப் பட்டவரை ஒரு ஷூ கம்பெனியில் போராட்டம் நடந்தால் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் வேலைக்குப் போவார்களாம். மற்றவர் போராட்டத்தில் ஈடுபடுவார்களாம். ஷிப்ட் மாறும்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேலைக்கும்...வேலையில் இருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்களாம். அதுமட்டுமல்லாமல் ஒரு கால் ஷூவை மட்டும் தயாரிப்பார்களாம். போராட்டம் முடிந்தவுடன் நஷ்டத்தை ஈடுகட்டிவிடுவார்களாம். அதனால் அரசுக்கும் சரி தனி நிர்வாகத்திற்கும் சரி அதிக நஷ்டமும் ஏற்படாது...தொழிலார்களின் தேவைகளும் நிறைவேறிவிடுமாம். நம் நாட்டில் இல்லாத மனித வளமா...மண் வளமா...நீர்வளமா...காற்று வளமா..."என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?" யோசியுங்கள்.
போராடுங்கள். நம் உரிமைக்காக போராடுவது நியாந்தான்.ஆனால் பொது..மற்றும் மற்றவர் சொத்துக்கு நஷ்டமோ...சேதாரமோ ஏற்படுத்துவதுதான் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சிந்தித்து முடிவெடுங்கள்.
இது ஒரு வேதனையின் பதிவுதான்.
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (22-May-22, 7:38 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 82

மேலே