கற்றறிந்தார் துஞ்சார் படைப்பட்ட நாயகனே போன்று – அறநெறிச்சாரம் 115
நேரிசை வெண்பா
தோற்றமும் சம்பிரதம்; துப்புரவுஞ் சம்பிரதம்;
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்; - தோற்றம்
கடைப்பட்ட வாறறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப்பட்ட நாயகனே போன்று 115
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
பிறப்பும் வினைமுறை, பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் வினைமுறை; உலகில் வாழும் உயிர்களை எமன் கவர்ந்து போவதும் வினைமுறை;
ஆதலால், அற நூல்களைக் கற்று உணர்ந்தவர்கள் பிறப்பின் இழிவையறிந்து, போர் முனையை அடைந்த சேனாதிபதியே போலச் சோர்வில்லாமல் பிறப்பினை யறுக்க முயல்வர்.
formality: சட்ட விதிமுறை ஒழுங்கு, சம்பிரதாயம், மரபொழுங்கு, ஆசாரம், வினைமுறை, சடங்கு, நவநாகரிக முறை, புற ஆசாரத்தன்மை, மரச்சட்டம் போன்ற பண்பு.
.