தாமதரனுக்கு பல்லாண்டு
பானையில் இருக்கும் வெண்ணையை கைஇரண்டால்
அள்ளிஅள்ளிப் உண்டு வாயெல்லாம் சிந்திவழிய
தரையில் சிந்தி பரவ என்ன அதுஓசை
என்று தாய் யசோதையும் அங்குவந்து
சேர சேயவன் மாதவன் செய்தக்கோலம்
கண்டு மிக்க கோபம் பூண்டு கோல்கொண்டு
பிள்ளையைத் துரத்தி அங்கு பின்னமரத்தடியில்
அவனைப் பிடித்து பெருமுறலில் மாயவனைக்
கயிற்றால் கட்டிடப் பார்க்கின்றாள்
கண்ணன் சிற்றிடுப்பைக் கட்ட கட்ட
கயிறும் பற்றாதுபோக சற்றே அயர்ந்துபோகின்றாள்
ஏரார்ந்தக் கண்ணி யசோதை தாயின் நிலைக்
கண்டு தன்னையே குறுக்கிக்கொள்கின்றான் மாயன்
தன் சேயை ஜெகத்ரட்சகனைத் தன்
கையால் உரலோடு பின்னி கட்டிப் போடுகிறாள்
யசோதை கொஞ்சம் அழுவதுபோல் பாவனை
செய்கின்றான் தாயைப் பார்த்து அவள் மனம்
இறங்கி நோக்க கள்ள விழிப்பு பார்வையும் தந்து
குழந்தையாய் சிரிக்கின்றான் என்னே இந்த
விந்தைக் கோலம் என்னத்தவம் புரிந்தாளோ
யசோதை இப்படி திருமாலுக்கே திருத்தாயாய்
இருந்து அவனைக்'காத்து' மகிழ்ந்திட
'தாமோதரா......கண்ணா கார்மேகவண்ணா
நல்லோரை வாழவைக்கும் பெருந்தெய்வமே
உனக்கு பல்லாண்டு பல்லாண்டு இசைப்பேனே
தாசன் வாசவன் உனக்கு