எதை எடுத்து செல்ல

ஆணவமும், அகங்காரமும்
அடியோடு அழியவேண்டும்
தன்னைப்போல பிறரையும்
எண்ணவேண்டும்
தன்னிடமுள்ள பொருளைப்
பிறருக்கும் பகிர்ந்து அளித்து
பசி போக்கி வாழவைப்பது
தர்மமாகும் , தலை காக்கும்

இதுபோல எல்லோரும்
அடுத்தவரையும் அரவணைத்தால்
ஒன்றே குலமென்றும்
ஒருவனே தேவனென்றும்
யாதும் ஊரே , யாவரும் கேளீரென்றும்
உரக்கக்கூறி
அனைவரும் ஒற்றுமையாய்
ஒரு தாய் மக்களென வாழலாம்

ஒன்று பட்டு வாழ்ந்த மக்கள்
வேறு நாட்டு மக்களென
வேறு பட்டு போனதால
வேரோடு அழிக்க நினைப்பது
அழியும் மண்ணுலகம் என்பதாலா
இல்லை ஆணவச் செயலா ?
இறந்த பின்னே எதை எடுத்து செல்ல
இந்த கொடூரச் செயல்கள்?

எழுதியவர் : கோ. கணபதி. (1-Jun-22, 1:00 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 44

மேலே