இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகக் கொளல்வேண்டும் – நாலடியார் 225

நேரிசை வெண்பா

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு
நல்இல் சிதைத்ததீ நாள்தொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால் 225

- நட்பிற் பிழைபொறுத்தல், நாலடியார்

பொருளுரை:

பொன் முதலிய பொருள்களோடு சிறந்த வீட்டையும் எரித்து அழிக்கும் இயல்பு வாய்ந்த தீயை நாள்தோறும் விரும்பித் நமது இல்லத்தில் சமைப்பதற்கு வளர்ப்பது போல,

தீயன செய்தாலும் நட்பு விடும் தன்மையர் அல்லாரைப் பொன்னைப் போல் மதித்துக் காத்துக் கொள்ள வேண்டும்.

கருத்து:

நண்பர் குறைகளைத் தமது பெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப் போற்றி யொழுகல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-22, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே