காதல் போர்முரசு கொட்டுகிறாய்

கன்னக் குழிவால் என்னில்
கனவுத் திரையை விரிக்கிறாய் !
மின்னல் விழிகள் இரண்டால்
ஒளிக்கீற்றை அள்ளித் தெளிக்கிறாய் !
மின்னும் கருங்கூந்தலை தவழவிட்டு
ஒருவானவில்லை என்னில்
விரிக்கிறாய் !
புன்னகையை மெல்லிதழில்
தவழவிட்டு
காதல் போர்முரசு கொட்டுகிறாய் !

ஆ வி

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jun-22, 11:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே