வென்றிடுவாயே
அன்புத் தோழா...
நீ
பிறந்ததே போர்களத்தில்தான்.
பிறந்தவுடன்
உன்னை கொல்ல
எத்தனை கம்ச மாமன்கள்...
வாலிபத்தில்
உன்னை தடம் மாற்ற
எத்தனை சகுனி தாத்தாக்கள்...
எண்ணத்தில்
விடம் விதைக்க
எத்தனை மந்தார கூனிகள்...
உரிமையில்
கைவைக்க எத்தனை
துரியோதன சகோதரர்கள்...
ஆம்
பிறந்ததிலிருந்து
இறப்பதுவரை
நீ இவர்களோடு
தினம்தினம்
போராடத்தான் வேண்டும்.
அதனால்
இந்த குருஷேத்திரப் பூமியில்
நீயம் ஒரு
செஞ்சட்டை வீரன்தான்.
ஒரேயொரு
கர்ணன் மட்டும்
கிடைத்துவிட்டால்
இந்த உலகையே ...
ஏன்
உன் வாழ்க்கையையே
வென்றிடுவாயே...!