விளம் 4 மா தேமா வாய்பாட்டில் 17 பாடல்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் 4 மா தேமா)
சம்பரப் பெயருடைத் தானவர்க்(கு) இறைவனைத்
..தனுவ லத்தால்,
அம்பரத் தும்பர்புக்(கு) அமரிடைத் தலைதுமித்(து)
..அமரர் உய்ய,
உம்பருக்(கு) இறைவனுக்(கு) அரசளித்(து) உதவினான்
..ஒருவன், நேமி
இம்பரில் பணிசெய, தசரதப் பெயரினான்,
..இசைவ ளர்த்தான் 82
இன்னமொன் றுரைசெய்வான், ‘இனிதுகேள், எம்பிரான்!
..இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய்
..அணுகி நின்றார்,
மன்னும்நம் பகைஞராம் வானுளோர்; அவரொடும்
..மாறு கோடல்
கன்னமன் றிதுநமக் குறுதியென் றுணர்தலும்
..கருமம் அன்றால் 98
- இராவணன் மந்திரப் படலம், யுத்த காண்டம்
(82 – 98 வரை 17 பாடல்கள் இந்த வகைப் பாடல்களே)

