அப்பா
"மகனாய் பிறந்த போது, துள்ளி
குதித்த அப்பா!
பார்த்துப் பார்த்து அழகான
பெயரை எனக்கு வைத்த அப்பா!
அம்மாவுடன் ஜோடியாய் சோறு
ஊட்டிய அப்பா!
'அப்பானு சொல்லு' என்று சொல்லி, என்னை பேச வைத்த அப்பா!
பொம்மையோடு பொம்மையாய், என்னோடு விளையாடிய அப்பா!
சலிக்காமல் உப்பு மூட்டை தூக்கிய
அப்பா!
பீச், ஜூ, என்று அழைத்து சென்ற அப்பா!
பாதி வழியில் தூங்கி விட்டாலும் சுமந்து வந்த அப்பா!
கோபத்திலும் வலிக்காமல் அடிக்கும் அப்பா!
எனக்கு சின்ன வலி என்றாலும்
துடித்து போகும் அப்பா!
எல் கே ஜியில் சேர்க்க, ராத்திரியே
ஸ்கூல் சென்று படுத்த அப்பா!
ஸ்போர்ட்ஸ் ஷூ கேட்ட போது
சனிக்கிழமையும் ஓவர்டைம் செய்த
அப்பா!
கொட்டும் மழையிலும் ஸ்கூல் வாசலில் குடையுடன், காத்திருந்த அப்பா,
ஜுரம் எனக்கு வந்த போது, ஊசிக்கு பயந்த அப்பா!
சைக்கிள் தொடங்கி பைக் வரையிலும்,
துடைத்து வைத்த அப்பா!
பாஸ் ஆகி விட்ட போது, தானே
பாயசம் செய்த அப்பா!
டிகிரி முடித்த போது, கர்வத்தில் நிமிர்ந்து நின்ற அப்பா!
மேல்படிப்புக்காக, வீட்டை அடமானம் வைத்த அப்பா!
வெளிநாட்டு வேலைக்கு போகையில் குழந்தை போல அழுத அப்பா!
நான் காதலியை மணக்க, அம்மாவோடு சண்டையிட்ட அப்பா !
பேத்தி பிறந்த போது,'என் அம்மா' என்று மகிழ்ந்த அப்பா!
தளர்ந்த போதும், பேரனுக்கு தோழனாய்
கிரிக்கெட் ஆடிய அப்பா !
நோயில் விழுந்த போதும், என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கும் அப்பா!
அப்பப்பா..... இன்னும் என்ன சொல்ல அப்பா?
அப்பாவாக பேண்ட் சட்டைக்குள்
வாழ்ந்திருந்த என் இன்னொரு
அம்மா நீ என்கிறேன் நான்!
அது தப்பா...?"
உன்னைப் போல அப்பா உருவில் அம்மாவாய் வாழும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்."