நல்ல காதல்
காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.
கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்
யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்
தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!