சுவையை கூட்டுகிறாய்
உன் விழியோடு என் விழி
விழுந்த போதுதான்...
உன் மொழியோடு என் மொழி
கலந்த போதுதான் ...
உன் வழியோடு என் வழி
இணைந்தபோதுதான்...
முகிழ்ந்தது காதல்.
கண்ணே...
தண்ணீரில் கரையும் சர்க்கரையாய்
என்னுயிரில் கரைந்து இனிக்கிறாய்.
உணவில் கரையும் உப்பாய் கரைந்து
என்வாழ்வின் சுவையை கூட்டுகிறாய்.
காலம் முழுதும் தொடரட்டும் - நம்
வாழ்வும் மலராய் மலரட்டும்.