சாமத்தியம்

நல்ல சோறு கறி இல்லை
விலைவாசி கூடிய
உடையில்லை .
நகைநட்டியில்லை
மெத்தியிட்டுத் தூங்கிட
வழியுமில்லை .

காவல் காரன்
தொழிலுக்கு லாயக்கில்லா
அப்பன் .
அதிகாரிகளே கழுத்தைப்
பிடித்துத் தள்ளி விட்ட
குப்பன் .

என்ன செய்திடுவாள்
இவளது அன்னை.
நம்மைப் போல் வெளிநாட்டு
பணிப் பெண் தொழிலும்
கை கொடுக்கவில்லை.

அப்பச் சட்டியும்
அப்பப் போது தீயும் நிலை.
இந்த வேளையிலே
தேவைக்கு மீறிய ஆசைகளை
பிள்ளைக்கு எவ்வழியில்
தீர்த்திடுவாள் அவளுக்கும் தொல்லை .

ஊரார் வீட்டு உடையை
உடுத்தி.
அழகு ஓவியமாய் இடையைக்
காட்டி.

பாவி என் மகன்
நெஞ்சத்திலே காதல் கடையை
விரித்து.
இவளின் உள்ளத்தில்
வலை விரித்த ஆசைகளை
நிறை வேற்றிட முயன்றாள் .

முயற்சியில் வெற்றி
கண்டாள்
விரும்பியதையெல்லாம்
அனுபவித்தாள் .

ஆசை அலை போல்
அதிகம் எழுந்திடவே
அடுத்தடுத்து கற்பனையில்
இறங்கினாள் .
யார் யாரோ அறிமுகத்தை
நாடினாள் .

இல் வாழ்வை உடைத்திட
என் மகன் காதிலே
தீக் கொள்ளியாய் சொற்களை
ஏவி அவனின்
உணர்வலைகளைக் கொன்று
தன் உயிரை தானே மாய்த்திடும்
நிலமைக்குத் தள்ளினாள்.

நாளு எழுத்துப் படிப்பையும்
வெளுப்பு விழுந்த தோலையும்.
கொண்டு விளையாடுகின்றாள்
பல ஆண்களின் வாழ்க்கை
என்னும் மைதானத்தில் நின்று.
இதில் பலியானது இரண்டு
பைத்தியமானது எத்தனையோ ?

ஐந்து வருடகாலம் எங்களது
இல்லத்து மருமகளாக வாழ்ந்தும்.
அவளது உள்ளத்தில் மறைத்திருந்த
முன்னால் வாழ்க்கைக் கதை தனை சொல்லிடாமல் மறைத்து
வாழ்ந்திட்ட சாமர்த்தியம்
இவளைத் தவிர எந்தப் பெண்ணிடமும் இருக்கப் போவதில்லை.

இந்நாளில் பைக்கில் சவாரி எடுத்து பாதை கடந்திட கை கோர்த்திடும்
அந்தப் பிள்ளை யார் பெற்ற
பிள்ளையோ நான் அறியேன் .
அவனின் ஆயுள் முடிந்து
மூச்சு நிறுத்தும் முன்னே
அறிவுரை சொல்லி விடுங்கள்.

இல்லையெனில் தேவைகள்
எல்லாம் பூர்த்தியானாதுமே
இவளது அன்னை சென்று விடுவாள்
குடிருப்பு சாஸ்திரியின் வீட்டைத் தேடி.
நிறுத்தம் கண்டு விடும் உடன்
நீடிக்காமல் அவனது உயிர் நாடி. 😭

எழுதியவர் : ஆர் எஸ் கலா (12-Jul-22, 3:15 pm)
பார்வை : 92

மேலே