திருநங்கைப் பற்றி ஒரு கவிதை
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*திருநங்கையின்*
*திருப்புமுனை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தவறு செய்வது
மனித இயல்பு என்று
சொல்வார்கள்....
அது கடவுள்
இயல்பாகவும் இருக்கிறதே !
இல்லை எனில்
திருநங்கை எப்படி ?
மனிதர்கள் கூட
ஓரிருமுறை தான்
தவறுகள் செய்வார்கள்...
ஆனால்
இந்த கடவுளோ
அதே தவற்றை
திரும்பத் திரும்ப
செய்து கொண்டுள்ளதே!
தட்டிக் கேட்கவோ
தண்டிக்கவோ
ஆளில்லை என்றால்
கடவுளும் கூட
தவறுகள் செய்யுமோ ?
அலி
அரவாணி
ஒன்பது என்ற
பட்டங்களையெல்லாம்
கிழித்தெறிந்து விட்டு....
" திருநங்கை " என்ற
பட்டத்தைச் சூட்டி
சமுதாய சிம்மாசனத்தில்
அமர வைத்த கலைஞரை
கட்சியை கடந்து சென்று
கை கொடுத்து
பாராட்டாமல் இருக்க
முடியவில்லை......!!!
அவர்களிடம்
மாமிசத்தை
தேடியது போதும்
இனியாவது
மனிதத்தை தேடுவோம்..!
திரைப்படங்கள்
திருநங்கைகளை வைத்து
கும்மியடிக்கும்
வழக்கத்தை ஒழிக்க வேண்டும்....
இல்லையென்றால்
திரைச்சீலையை
நாம் கிழிக்க வேண்டும்....!!!
அவர்கள்
வீதியில் செல்லும்போது
கேலி கிண்டல்களால்
மிதித்துச் செல்லாமல்....
அவர்களையும்
மனிதர்களாய்
மதித்துச் செல்வோம் ....!!!
மதிப்பற்ற பாலியல்
தொழில் மட்டுமே
செய்ய முன் வந்தவர்கள்...
இப்போது
மதிப்புள்ள
தொழில்களையும் செய்ய
முன்வந்துள்ளார்கள்...
ஆராத்தி எடுத்து
அவர்களை
வரவேற்காமல் போனாலும்...
முகம் சுளித்து
அவர்கள்
முன்னேற்றத்தை
தடுத்து விடாதீர்கள்! தன்னம்பிக்கையை
தகர்த்தெறிந்து விடாதீர்கள்....!
அவர்களை
ஒரு வேடிக்கைப்
பொருளாக பார்க்காமல்....
அவர்களுக்கும்
ஒரு மனம் உண்டு என்பதை
நாம்
என்று உணர்போகிறோம்.?
இனி வரும் காலம் திருநங்கைகளுக்கு
நற்காலம் என்பதை விட ....
நமது தேசத்தில்
ஒரு அவமானம்
கழுவப்பட்ட
பொற்காலம் என்பதே
சாலச் சிறந்ததாகும்..!!!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

