உள்ளத்தில் ஓராயிரம் கற்பனைகள்

உணர்வுகளில் வந்து மோதிடும்
உந்தன் நினைவலைகளில்
உள்ளத்தில் ஓராயிரம் கற்பனைகள்
அந்தக்
கற்பனைகள் காதில் வந்து
காதல் பேசும் !
----புதுக் கவிதை வடிவில்

உணர்வு களில்வந்து மோதிடும் உந்தன்
நினைவின் அலைகள் தவழும் அழகினில்
உள்ளத்தி லாயிரம் கற்பனைகள் காதினில்
காதல் மொழிபே சுது

----அதுவே யாப்பு வடிவில்
வடிவம் எதுவாயினும் கவிதைக்கு கற்பனை சொல் பொருள் அழகு
இருப்பின் கவிதை மனத்தைத் தொடும்.

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-22, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே