அவள்

ஓராயிரம் கதை சொல்லும் அவள்
விழிகளுக்கு பாவாயிரம் எழுத நினைத்தேன்
பழியாய் அவள் பார்வைக்கு காத்திருந்தேன்
அப்போது நான் கண்டேன் அலர்ந்தும்
அலராமலும் இருக்கும் தாமரைபோல் காட்சி
தந்த அவள் செவ்விதழ்கள் பேசாது
என்னைப் பார்த்து புன்னகைக்க அவ்விதழ்கள்
தன்னுள் பூட்டிவைத்த காதல் கவிதைகள்
எத்தனையோ அதை அவிழ்த்து விடவா
பாவாயிரம் பாடி என்று நினைக்க
என்னை வந்து மெல்லத் தழுவி
அணைத்த இருகரங்கள் என்னை ஆட்கொள்ள
என்னை மறந்தேன் கவிஞன்நான்
காதலன் ஆனேன் இனி எழுதி
என்ன பயன் காவியமே என்னை அணைக்க
என்று கொள்ளை இன்பத்தில் ஆழ்ந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-22, 1:14 pm)
Tanglish : aval
பார்வை : 155

மேலே