மழை

மழை
====
(காவடிச்சிந்து)
**
வானமதில் வந்துலவும் மேகம் - கண்
வடிக்கின்ற நிலைமாறின் சோகம் - அது
வந்துதினம் சிந்துமெனில் நந்தவனம் சந்ததமும்
வாழும் மணம் சூழும்
*
தானமெனக் கொண்டுவரும் நீரை - பெருந்
தாகமது கொண்டிருக்கும் வேரைச் சற்று
தட்டிவிடத் தொட்டுறிஞ்சி மொட்டவிழ விட்டுவிடும்
தருமம் இறை கருமம்
*
3
*வளையற் சிந்து
****
அழகுடனே பொழிவதிலே
அரும்புவிடச் செய்யும் - மழை
அடவிதனை நெய்யும் - நம்
அடிமனத்தைக் கொய்யும் - மலை
அருவிகளும் சிரித்திருக்க
அருட்கொடையைப் பெய்யும்
*
பழகிடுமே பாங்குடனே
பருவமழைக் காலம் - அது
பவனிவரும் கோலம் - மண்
பசைபிடிக்கச் சாலம் - வளர்
பயிர்களுக்கு உயிரோட்டம் பரிசளிக்கும் சீலம்
*
4)கும்மிச்சிந்து
**************
பூமியில் மாமழை போடுவ தாலொரு
பூங்கொடிப் பூத்திடக் காணுவமே
சாமியைப் போல்மழைச் சாரலை வணங்கிச்
சந்ததம் மகிழ்ச்சிப் பூணுவமே!
*
5)இலாவணி
****
வண்ணமுகில் விண்ணகன்று வந்துவிழும் பூமியிலே
வாசமலர் பூத்துவிடும் பாரு பாரு
எண்ணமெலாம் பூமணக்க இயற்கைதன் கொடையாக
இழுத்துவரும் நந்தவனத் தேரு தேரு
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jul-22, 1:50 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 42

மேலே