மெளனம்

மழையின் மெளனம்
வறட்சியானது
காற்றின் மெளனம்
வெப்பமானது
தெளிவின் மெளனம்
குழப்பமானது
சுவையின் மெளனம்
அருவருப்பானது
சுகந்தத்தின் மெளனம்
துர்நாற்றமானது
சுடரின் மெளனம்
இருளானது
சுவாசத்தின் மெளனம்
மரணமானது

எழுதியவர் : நிரோஷனி றமணன் (19-Jul-22, 4:16 am)
சேர்த்தது : நிரோஷா றமணன்
பார்வை : 326

மேலே