காதல்
உன்மீது நான் கொண்ட காதல்
மாசிலா உண்மைக் காதலே அது
வசந்தத்தில் பூக்கும் மலர் போல
மார்கழியில் கொடிமேல் தாங்கும்
பனி முத்துக்கள் போல தடாகத்
தாமரை மலர் போல என்று இப்படியே
சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால்
அதன் சாரம் எது என்று நீகேட்பின்
சொல்வேன் ' உன்னை கோபித்து
அக்கணம் உன்னை வெறுக்கும் போதும்
என்மனம் உன்னையே விரும்புகிறதே'
இன்னும் என்ன வேண்டும் சொற்கண்ணே
என்னுயிரைக் கேட்பினும் இனிதே
அளித்துடுவேன் உனக்கு உன்மீது
நான் கொண்ட காதல் காணிக்கையாய்.

