நீயும் கடவுள் ஆகலாம்

சிலைகளைப்போல் கல்லாயிருந்து
எல்லாவற்றையும் வேடிக்கை பார்...
எதுவும் உன்னை பாதிக்காமல்
பார்த்துக் கொள்.
எதுவும் உன்னால் பாதிக்கப்படாமல்
பார்த்துக் கொள்.
எதற்கும் அசைந்து விடாதே...
எதற்கும் அடிபணிந்தும் விடாதே...
கல்லுக்குள் ஈரம்போல் - உன்னுள்ளும்
கருணை சுரக்கட்டும்.
எல்லாவற்றிற்கும் புன்னகையையே
விடையாய் பதிவிட்டு விடு.
எல்லாவற்றிற்கும் மௌனத்தையே
பதிலாய் சொல்லி விடு.
பற்றோடும் இரு...
பற்றற்றும் இரு.
உன் மேல்
சந்தன அபிஷேகம் நடக்கட்டும்.
சந்தோஷப பட்டுவிடாதே..
சேற்றை வாரி இறைக்கட்டும்
சேதாரப்பட்டு விடாதே.
உன்னோடு
விவாதிக்கட்டும்...
வாழ்த்தட்டும்...
தாழ்த்தட்டும்...
துதி பாடட்டும்...
தூக்கி எரியட்டும்...
நிந்திக்கட்டும்...இல்லை
பின்பற்றட்டும்...
எது நடந்தாலும்
நீ கல்லாய்
உறுதியாய் இருந்து
சமாளித்து விட்டால்
நீயும் கடவுள் ஆகலாம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Jul-22, 5:58 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 265

மேலே