பிரியமானவளே இன்னும் நீ வராமலிருந்தால்
பிரியமானவளே
அந்தி வானின் அழகினைப்பார்
வண்ணத்தில் வாசலை திறந்து வைத்து
நமக்காகவே காத்திருக்குது
இன்னும் நீ வராமலிருந்தால்
எழில்மிகு மேற்கு வானம்
விடைபெற்றுச் சென்றுவிடும் !
அந்திவா னத்தினழ கைப்பாரா யோநீ
நமக்கா கவேகாத் திருக்குது வண்ணத்தில்
மேற்குவான வாசல்தன் னைதிறந்து வைத்து
விடைபெற்றுச் சென்றுவி டும்பிரிய மானவளே
இன்னும் வராமலிருந் தால் !
---புதுக்கவிதை வரிகள் பஃறொடை வெண்பாவாங்க