மகதி சகதி

பிறந்த இரு பெண் குழந்தைகளில்
ஒரு குழந்தைக்கு 'மகதி' என்ற பெயர்
இரட்டையர் ஆயிற்றே பெயர் பொருத்தம்
இருப்பது நல்லது என்றார் சோதிடர்.

கொள்ளுப் பாட்டியின் ஆசை 'மகதி'க்குப்
பொருத்தமான பெயர் 'சகதி' சரியென்றார்
அவர் பேச்சை மீறினால் அவமதிப்பு ஆகும்
இரண்டாவது பெண் குழந்தை 'சகதி'.

அவரவர் விருப்பப்படி பெயர்களை உருவாக்கி
பிள்ளைகளுக்குச் சூட்டி பெருமிதம் அடையும் காலம்
ஏதோ ஒரு பெயரை வைத்து அதை இந்திப்
பெயரென்று கூறினால் போதும் "ஸ்வீட் நேம்" ஆகிவிடும்.

தற்காலத் தமிழரின் அடையாளம் இதுவே!



@@@@@@@@@@@@@@@@@@@@
Mahati = Great, Name of a raaga. Indian origin.

எழுதியவர் : மலர் (13-Aug-22, 12:51 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : pakthi sogathaie
பார்வை : 33

மேலே