மாஸ் காதல் கவிதை

🌸🥀🌸🥀🌸🥀🌸🥀🌸🥀🌸

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌸🥀🌸🥀🌸🥀🌸🥀🌸🥀🌸

நல்லவேலை
இவள்
இதுவரை
சிலை கடத்துபவர்கள்
கண்ணில்
படவே இல்லை
ஒருவேளை
பட்டிருந்தால்
இவளை
ஐம்பொன் சிலை என்று
நினைத்து
அடுத்த வினாடியே
கடத்திக் கொண்டு
போயிருப்பார்கள்.....!!!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

குறிப்பிட்ட
அளவிற்கு மேல்
தங்கம் வைத்திருந்தால்
வரிக் கட்டச்சொல்லும்
அரசாங்கம்.....
இவள் பெற்றோர்
தங்கச் சிலையே
வைத்திருக்கிறார்கள்
எப்படி
கண்டுகொள்ளாமல்
இருக்கிறதோ...?

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

நல்ல வேலை
கம்பன் இறந்துவிட்டான்
அடி பெண்ணே!
உன்னை மட்டும்
பார்த்திருந்தான்....
சீதையை
வர்ணித்த கைகளை
வெட்டிக்கொண்டிருப்பான்....

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

எல்லோரும்
யாரை
மயக்க வேண்டுமோ
அவர்கள் தலையில்
மைத்தடவித்தான்
மயங்க வைப்பார்கள்....
அடி பெண்ணே !
நீ மட்டும் எப்படி
உன் கண்களில்
மைத்தடவி
என்னை
மயங்க வைக்கிறாய்.....???

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

பெண்ணே |
கம்பன்
கம்பராமாயணத்தை
எழுதுவதற்கு முன்னால்
உன்னைக் கண்டிருந்தால்
சீதையை
வர்ணிக்காமலேயே
முடித்திருப்பான்.....!
ஒருவேளை
கம்பராமாயணத்தை
எழுதிய பின்
உன்னை கண்டிருந்தால் கம்பராமாயணத்தையே !
கிழித்திருப்பான்.....!!!

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

சொர்க்கம்
இருக்கும் இடத்திற்குதான்
நாம்
போகவேண்டும் என்று
சொல்வார்கள்
அடிப்பெண்ணே !
நீ இருக்கும் இடத்திற்கு
எப்படி?
வருகிறது சொர்க்கம்...?

*கவிதை ரசிகன் குமரேசன்*

🌸🥀🌸🥀🌸🥀🌸🥀🌸🥀🌸

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Aug-22, 7:54 pm)
பார்வை : 45

மேலே