நிலா நானாகின்றேன்

ஒருதலைக் காதலை
ஒப்புவிக்கின்றேன்
ஓடும் உன் நிழலை
ஒட்டி நிற்கின்றேன்..!!

வளர்ப்பு நாயினை
வருடிச் செல்கின்றாய்
வாய் பிளந்து நானும்
நாய் பிறவி கேட்கின்றேன்..!!

மழை நேரங்களில்
உன் உள்ளங்கை குடைக்குள்
உன் உருவச் சிலை
வெட்டிய மின்னல்கள் கேட்டன
சிலையின் விலை..!!

இரு கண்கள் கொண்டு
எனைப் பார்கின்றாய்
என் இதயத்துடிப்பு
இரட்டிப்பாகின்றது..!!

உன் ஆடை
மோதிய தென்றலைத்
தழுவிக் கொள்கின்றேன்
தனிமை வெல்கின்றேன்..!!

நிலவுகளை தினந்தினம்
நிராகரிக்கும் இரவுகளாய்
நீ இருந்து விட
நிலா நானாகின்றேன்..!!!


செ.மணி

எழுதியவர் : செ மணிகண்டன் (16-Aug-22, 7:55 pm)
சேர்த்தது : செ மணிகண்டன்
பார்வை : 148

மேலே