ஞானேந் திரியங்கள் நன்றாய் உரைக்கக்கேள் - உண்மை விளக்கம் 11

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

ஞானேந் திரியங்கள் நன்றாய் உரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா – ஈனமாம்
சத்தாதி யையறியும் தானம் செவிதோல்கண்
அத்தாலு மூக்கென் றறி. 11

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

ஞானேந்தியங்களை நன்றாகச் சொல்லுகிறோங் கேள், குறைவு பொருந்தி மிகுகின்ற பஞ்சபூதங்களிடமாக நின்று, அவை தாழ்வாகிய சத்தாதி விடயங்களை அறியும், அவற்றிற்குத் தானம் சுரோத்திரம் துவக்கு சட்சு அந்தச் சிகுவை ஆக்கிராணமென்று அறிவாய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Aug-22, 10:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே