ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம் ஆசைதரும் ஐம்புலனே யாம் - உண்மை விளக்கம் 10

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் – மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே யாம். 10

பொழிப்புரை:

உனக்கு உண்மையாகப் பஞ்ச மகா பூதங்களுஞ் சொன்னோம், கள்ளமிகுந்த பஞ்சவிடயங்களை மெல்லச் சொல்லுமிடத்து, சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய இவை ஆசையைத் தருகின்ற அவ்வைம் புலன்களாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Aug-22, 9:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே