செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்து எய்தும் வினையின் பயன் – அறநெறிச்சாரம் 156

நேரிசை வெண்பா

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக; - பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து)
எய்தும் வினையின் பயன். 156

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை பிறந்த இப்பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக;

இனி இன்னொரு பிறவி எடுத்து அடையும் இன்ப துன்பங்களை இம்மையில் தாம் பிறந்து செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-22, 12:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே