பச்சை நாவி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கடியதொரு குஷ்டங் கனத்தவிஷ சன்னி
கொடியதொரு குன்மங் குலையும் - படியில்
தளிரஸ்தி வெப்புடனே தாகசுரம் தீரும்
வளர்பச்சை நாவிதனை வாழ்த்து
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் குட்டம் எனும் குறை நோய், விஷசந்நிபாதம், வயிற்று நோய், அத்திச்சூடு, தாகசுரம் ஆகியவை கெடும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
