சூத்திர நாவி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

கா’ய்’ச்சல் தலைநோய் கனத்தசந்நி பாதமெரி
பூச்சிவி ஷக்கடிஉட் புண்குஷ்டங் – கூச்ச(ல்)தரு
காத்திரத்தே ளுங்குடிப்போம் காரளகப் பைங்கொடியே
சூத்திரநா விக்குத் துவண்டு

- பதார்த்த குண சிந்தாமணி

இது சுரம், தலைநோய், சன்னி, எரிக்கிருமி, பாம்பின் விடம், உள்புண், குறை நோய், தேள்விடம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-22, 6:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே