சோம்பலால் வறுமை வரும்

திருக்குறள்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி




நேரிசை வெண்பா


வறுமையும் நம்முடனே வந்து பிறந்த
சிறுமை தருமது சோம்பல்-- இறுமே
முயற்சி தனையும் முயன்றுத் தொடர
வியன்தேட்டை சேரா வியப்பு



முன்வினை ஊழால் ஒருவனுக்கு செல்வம் சேர வெண்டுமென்றால்
அந்த ஊழ்வினை அவனுடைய செல்வத்தை நகராமல் பார்த்துக் கொள்ளும்.
அதுபோல ஊழ் வினையால் ஒருவனுக்கு வறுமை சேர வேண்டுமெனில்
அந்த ஊழ்வினை அவனுக்கு வேண்டிய சோம்பலைத் தொடர்ந்து தந்து
முன்னேற விடாமல் செய்து துன்பத்தை தந்து கொண்டே இருக்கும்.




...

எழுதியவர் : பழனி ராஜன் (23-Aug-22, 11:16 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 433

மேலே