கரு நாவி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எண்ணாச் சுரம்போம் இறங்கும்பி லீகமறும்
புண்ஆறும் ஊரும் புழுக்க(ள்)விழும் - தண்ணாரும்
வல்லை கவிகையென வையகத்தோர் சொல்லிடுநோய்
இல்லையொரு கார்நாவிக் கே

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் நாவொட்டிக் காய்ச்சல், நழுகிய பீலிகம், விரணம், கிருமிகள், வல்லைக்கட்டி, மகோதரம், வாதசுரம் இவை தீரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Aug-22, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே