வெள்ளை நாவி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குஷ்டங் கடிசூலை கூடுபுரி வன்கிருமி
துஷ்டகுன்ம வாதந் தொலையுங்காண் - வட்டமுலைப்
பெண்ணே சுரந்தணியும் பேருலகத் தார்பகைக்கும்
வெண்ணாவி தன்னை விரும்பு
- பதார்த்த குண சிந்தாமணி
வெள்ளைநாவிக்குக் குட்டம், காணாக்கடி, குத்தல், காய்ச்சல், மார்பை வீங்கச்செய்யும் கிருமி நோய், வாதகுன்மம், ரூட்சை ஆகியவை ஒழியும்

